
தமிழ்நாட்டில் நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஆர் ஜே பாலாஜி தற்போது எல் கே ஜி என்ற தமிழ் படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
படத்திற்கு கதை, திரைக்கதை இரண்டையும் அவரே எழுதியுள்ளார். பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தினை இயக்குனர் பிரபு இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் பஸ்ட்லுக் வெளியீட்டிற்கு அவர் அரசியலுக்கு வருவது போலும் வைகோவுடன் இணைந்து எடுத்த செல்பி மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் முடிவை அறிவித்தது போன்ற பல விஷயங்கள் இருந்தது.
அது மட்டும் இல்லாமல் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நாஞ்சில் சம்பத், ஜே கே ரித்திஷ், சந்தான பாரதி, ராம்குமார் ஆகியோர்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடல் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இரண்டு நிமிட ட்ரைலரில் ஆற்றில் தெர்மக்கோல், பசு மற்றும் மனிதன் சார்ந்த கேள்விகள், யோகா சேலஞ் போன்ற தமிழ்நாட்டு அரசியல் முதல் இந்திய அரசியல் வரை எல்லாத்தையும் கலாய்த்துள்ளனர்.
முழுக்க முழுக்க தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து படமாக்கப்பட்டிருக்கும் எல் கே ஜி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பொங்கல் அன்று வெளி வர இருந்த இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போயிருக்கிறது எனினும் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.
மறுமொழி இடவும்