
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் 30 வயதுக்குள் சாதித்த 30 பேரின் பட்டியலில் விஜய் தேவரகொண்டாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய 25-வது வயதில் வங்கியில் குறைந்த பட்ச இருப்புத்தொகை 500 ரூ இல்லாத காரணத்தால் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. நான்கு வருடம் சென்ற நிலையில் தற்போது போர்ப்ஸ் பட்டியலில் சாதித்தவர்கள் பட்டியலில் இருக்கிறேன் என மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
தெலுங்கு நடிகரான இவர் தமிழில் சமீபத்தில் வெளிவந்த நோட்டா படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பெல்லி சூப்புலு படத்தில் அறிமுகமாகினர். அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் தெலுங்கில் பிரபலமான இவர் பின்னர் மகாநதி, கோவிந்தம், நோட்டா, டாக்ஸிவாலா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அடைந்த சாதனை உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
மறுமொழி இடவும்